சமற்கிருதத்தை ஓட ஓட விரட்டுவோம்! – கருணாநிதி
சென்னையில் முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் பேத்தியும் முன்னாள்அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா மகளுமான சமந்தா – கிரண் திருமண நிகழ்ச்சியை நடத்திய பொழுது கலைஞர் கருணாநிதி, சமற்கிருத எதிர்ப்பு குறித்தும் உரையாற்றினார். மீண்டும் தமிழ்நாட்டில் – இந்தியாவில் – சமற்கிருதம் தலைதூக்குமா? வடமொழி நம்மீது படை யெடுக்குமா? எனக் கேள்விக் குறி ஏற்பட்டுள்ள நேரத்தில் இங்கே நாம் குழுமியிருக்கிறோம். வட மொழிக்கு ஆதிக்கம், சமற்கிருதத்திற்கு ஆதிக்கம் என்று பேசப்படுகின்ற காலம் ஏற்பட்டுள்ளது. தூய தமிழ் மொழிக்குத்தான் செல்வாக்கு, தூய…