துளிப்பா நூற்றாண்டு விழா, காரைக்கால்
சாகித்ய அகாதெமி காரைக்கால் ஔவையார் அரசு மகளிர் கல்லூரி ஐப்பசி 17, 2046 / நவ.03, 2015
என்ன செய்யப் போகிறோம்? – பா.செயப்பிரகாசம்
மதவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராக அறிக்கை போதுமா? மூடநம்பிக்கைகளுக்கு எதிராய் எழுதியும் பேசியும் வந்த கன்னட எழுத்தாளர் ’கல்புர்கி’ சில மாதங்கள் முன்பு கொலை செய்யப்பட்டார். அவர் முதலான மூன்று எழுத்தாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். எழுத்தாளர் கே. எசு. பகவான் போன்றோர் மதவாதஆற்றலா்களின் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளார்கள். அடிப்படை மதவாத ஆற்றலர்களின் அச்சுறுத்தலுக்கு எதிராய் எழுத்துலகில் குமுறல் மையம் கொண்டுள்ளது. எதிர்வினை ஆற்றாத சாகித்ய அகாதமி நிறுவனத்தின் போக்கைக் கண்டித்து, மதவாதச் செயற்பாட்டாளர்களின் காவலனாக முன்னிற்கும் அரசுக்கு எதிர்ப்பைத் தெரிவித்து எழுத்தாளர் நயனதாரா சேகல், சாகித்ய…
சாகித்ய அகாதமி விருதுகள் அறிவிப்பு: தமிழில் ‘கொற்கை’ புதினத்திற்கு விருது
2013- ஆம் ஆண்டுக்கான சிறந்த இலக்கியப் படைப்புகளுக்குரிய சாகித்ய அகாதமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அகாடமியின் தலைவர் விசுவ நாத்து பிரசாத்து திவாரி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள், நூலாசிரியர்களின் பட்டியலை 18.12.13 புதன்கிழமை அன்று வெளியிட்டார். தமிழ்,வங்காளம், உருது, தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலான 21 மொழிகளில் கவிதை, புதினம், சிறுகதை, தன்வரலாறு ஆகிய பிரிவுகளில் சிறந்த படைப்புகள் இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றன. தமிழில் ‘கொற்கை’ என்னும் புதினத்திற்காக ஆசிரியர் சோ டி குரூசுக்கு வழங்கப்படுகிறது. கவிஞர்களுக்கு இந்த ஆண்டு…
சாகித்திய அக்காதெமி போக்கை மாற்றிக்கொள்ள பேரா. மறைமலை வேண்டுகோள்!
சாகித்ய அகாதெமி 2013- ஆம் ஆண்டுக்கான படைப்பிலக்கிய விருதுகளை அறிவித்துள்ளது. இவற்றுள், தமிழ்க்கவிதைப் படைப்பிற்கான விருது எதுவும் அறிவிக்கப்படவில்லை. இது குறித்துக் கண்டித்துப் பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார், சாகித்ய அகாதெமி, இனியேனும் தன் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். அவரது வேண்டுகை வருமாறு :- தமிழ் ஒரு கவிதைமொழி எனப் போற்றுகிறோம். மென்மையும் நுண்மையும் பண்பாட்டு மேன்மையும் கொண்ட தமிழ்க்கவிதை உலகெங்கும் போற்றப்பட்டுவருகிற சூழல் மகிழ்வளிக்கிறது. ஏனைய மொழிப்பிரிவுகளில் அடிக்கடி கவிதைநூல்கள் சாகித்திய அக்காதெமி விருது பெறுவதைக்…
மானாமதுரை பெண்ணிற்குத் தேசிய விருது
மானாமதுரை: இந்திய அரசின் “சங்கீத நாடக அகாதமி’ சார்பில், 2013ம் ஆண்டிற்கான அகாதமி விருதுக்கு, மானாமதுரை கடம் உருவாக்குநர் மீனாட்சி தேர்வாகியுள்ளார். நான்கு தலைமுறையாக கடம் உற்பத்தியில் கேசவன் குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய அரசின் இயல், இசை நாடக அகாதமிக்குட்பட்ட, சங்கீத் நாடக அகாடமி சார்பில் இயல், இசை, நாடக கலைஞர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் இசைக்கருவிகள் உருவாக்தக்தில் பங்களிப்போரையும் கலைஞராகக் கருதி விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு, மானாமதுரை குலாளர் தெரு, கேசவன் மனைவி மீனாட்சி (60), தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த அமைப்பின்…