சாதிகள் ஒழிந்தால் மக்களாட்சி வேரூன்றும்! – சி.இலக்குவனார்
சாதிகள் ஒழிந்தால் மக்களாட்சி வேரூன்றும்! இன்னும் மக்களாட்சி முறைக்குரிய தேர்தலுக்கு வேட்பாளர் களை நிறுத்துவது சாதி அடிப்படையிலேயே நிகழ்கின்றது என்பதை யார்தாம் அறியார். வேட்பாளர் தகுதியறிந்து வாக்குகள் கொடாது சாதியறிந்துதானே கொடுக்கின்றனர் பெரும்பாலார். சாதிகள் வேண்டா என்று பறை சாற்றும் கட்சிகள்கூட இந்நிலையைப் புறக்கணிக்க முடியவில்லையே! ஆகவே சாதிகளின் பேரால் நிகழும் அனைத்தையும் தடுத்து நிறுத்தற்குச் சட்டத்தின் துணையை நாடல் முற்றிலும் பொருத்தமேயாகும். எம்முறையிலானும் சாதிகளை ஒழித்தல் வேண்டும். எவ்வளவு விரைவில் சாதிகன் ஒழிகின்றனவோ அவ்வாளவு விரைவில் நாட்டு நலம் காக்கப் பட்டதாகும்….