தோழர் தியாகு எழுதுகிறார் 37 : சாதிக் குருடர்களா? நீதித் திருடர்களா?
(தோழர் தியாகு எழுதுகிறார் 36 தொடர்ச்சி) இனிய அன்பர்களே! இட ஒதுக்கீடு தொடர்பான கருத்துப் போரில் சமூக நீதிக் கட்சியாராகிய நம் பங்கு தெளிவாகவும் திட்டவட்டமாகவும் இருக்க வேண்டும். அது தொடர்பாக சமூகநீதி மறுப்பாளர்கள் நடத்தும் பலமுனைத் தாக்குதலை முறியடிக்கும் கருத்துப் படைக்கலன்கள் நம் கொட்டிலில் அணியமாய் இருக்க வேண்டும். அந்த முறையில் கடந்த காலத்தில் (தமிழ்த் தேசம் 2007 சித்திரை இதழில்) எழுதப்பட்டதென்றாலும் இன்றளவும் பொருத்தப்பாடுள்ள ஒரு கட்டுரையை இம்மடலில் மீள் வெளியீடு செய்கிறோம். பயன் பெறுங்கள், நம் உறவுகள் பயன்பெறச் செய்யுங்கள்….