சாதிமுறையைத் தூக்கிப் பிடித்தவர்களால் ஏற்பட்ட இடைச்செருகல்கள்
சாதிமுறையைத் தூக்கிப் பிடித்தவர்களால் ஏற்பட்ட இடைச்செருகல்கள் மிகப்பழங்கால நூல்களில் இடைச்செருகல்கள் ஏற்படுவது மிக இயல்பான ஒன்றாகும். கி.மு.7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தொல்காப்பியத்திலும் இவ்வாறே ஏற்பட்டுள்ளது. குறும்புக்காரர்களின் கைகள் இதனைத் தொடாமல் விட்டு வைக்கவில்லை. எழுத்து அதிகாரமும் சொல் அதிகாரமும் தொகுப்பாக அமைந்து ஒவ்வொரு இயலின் பொருண்மையும் நிரல் பட அமைந்து நூற்பாக்கள் ஒன்றோடு ஒன்று பிணைந்து விளங்குகிறது. இவ்விரண்டும் மொழி குறித்த ஆய்வாகும். இடைச்செருகல் ஏற்பட்ட இடைக்காலத்தில் மொழிக் கல்வியில் யாருக்கும் நாட்டம் இல்லை என்பது தோன்றுகிறது. ஆனால் பொருள்…