குறள்நெறிப்படி சாதி சமயமற்ற சமுதாயத்தை நிறுவிட முன்வரவேண்டும்   2000 வருடங்களுக்கு முன்னர்த் தமிழகத்தில் இருந்தவற்றையும், இனி இருக்க வேண்டியவற்றையும் வள்ளுவர் குறளில் கூறியுள்ளார். குறள்நெறி தமிழகத்தில் பரவிடும் நேரத்திப், பிறர் தந்த கலைக்கும் பண்பாட்டிற்கும் இடம் கொடுத்ததின் காரணமாகத் தமிழர் மாண்புகள் நாசமாகி விட்டன. இன்று தமிழர், குறள்நெறியைப் போற்றிடும் காலம் வந்துள்ளது.   குறள் நெறியுடன் வாழ்ந்த தமிழரை, சமுதாயத்தின் நச்சுப்பூச்சிகள் என்று கூறியவர் எவர்? ஏன் தமிழர் சமுதாயம் சீர்கெட்டது? இன்று மீண்டும் குறள் நெறிப்படி சாதி, சமய…