(ஊரும் பேரும் 58 : இரா.பி.சேது(ப்பிள்ளை) – கருந்திட்டைக்குடி – தொடர்ச்சி) ஊரும் பேரும் சாத்தங்குடி திருவாரூர்த் திருத்தாண்டகத்தில் சாத்தங்குடியிற் காட்சி தரும் ஈசன் பெருமை பேசப்படுகின்றது.“எல்லாரும் சாத்தங் குடியிற்காண இறைப்பொழுதில் திருவாரூர்ப் புக்கார் தாமே”என்பது திருநாவுக்கரசர் பாட்டு. இப் பாசுரத்திற் குறித்த சாத்தங்குடி, பாடல் பெற்ற திருப்புன்கூருக்கு ஒன்றரை கல் தூரத்தில் உள்ளது. தனிச் சாத்தங்குடி என்று திருநாவுக்கரசர் குறித்தவாறே இன்றும் அவ்வூர் முற்றும் கோயிலுக்கே உரியதாக உள்ளது.22 உருத்திரகோடிதிருக்கழுக் குன்றத்தின் அடிவாரத்திலுள்ள சங்கு தீர்த்தம் என்னும் திருக்குளத்திற்குத் தென் கிழக்கில் உருத்திர…