(ஊரும் பேரும் 53 : இரா.பி.சேது(ப்பிள்ளை): திருமேனியும் தலமும் – தொடர்ச்சி) ஊரும் பேரும் இறையவரும் உறைவிடமும் இரு சுடர்      இந் நில வுலகிற்கு ஒளி தரும் சூரியனையும் சந்திரனையும் நெடுங் காலமாகத் தமிழகம் போற்றி வருகின்றது. சிலப்பதிகாரம் மங்கல வாழ்த்துரைக்கு மிடத்து ஞாயிறு, திங்கள் என்னும் இரு சுடர்களையும் போற்றுதல் இதற்கொரு சான்றாகும்.1 பரிதி நியமம்     தேவாரத்தில் பரிதி நியமம் என்ற கோயில் பாடல் பெற்றுள்ளது. நியமம் என்பது கோயில்.2 எனவே, பரிதி நியமம் என்பது சூரியன் கோயில்3 ஆகும்….