தோழர் தியாகு எழுதுகிறார் 217 : குடியாட்சியமும் கல்வியும்
(தோழர் தியாகு எழுதுகிறார் 216 : கலைமகள் எனும் தொன்மம்-தொடர்ச்சி) தோழர் தியாகு எழுதுகிறார்குடியாட்சியமும் கல்வியும் இனிய அன்பர்களே! படிக்க வேண்டும்! ஏன் படிக்க வேண்டும்? நல்ல வேலைக்குப் போய்ப் பொருளீட்டுவதற்காகப் படிக்க வேண்டும். படிக்கா விட்டால் மற்றவர்களோடு போட்டியிட்டு முன்னேற முடியாதல்லவா? சுருங்கச் சொல்லின் வாழ்க்கைக்கு அணியமாக வேண்டும் என்பதற்காகவே கல்வி! இதுதான் கல்வி பற்றிப் பரவலாக நிலவும் நம்பிக்கை. இதை மறுத்த கல்வியாளர் அமெரிக்காவைச் சேர்ந்த அறிஞர் சான் தெவி. இவர் அம்பேத்துகரின் ஆசிரியர். “கல்வி என்பது வாழ்க்கைக்கு அணியமாதல் அன்று….