சமயச் சார்பற்ற மொழியும்- புனிதமான மொழியும்! : மறைமலை இலக்குவனார்
சமயச் சார்பற்ற மொழியும் புனிதமான மொழியும்! புராணங்களின் அடிப்படையை மட்டுமே கொண்டு சமற்கிருதத்தை மொழிகளுள் தலைமைவாய்ந்த மொழியாகக் கூறப்படுவதும் இந்தியப் பண்பாட்டில் ஆரியப்பண்பாடே தலைமைச்சிறப்புடையதாகப் பேசப்படுவதும், சமயச்சார்பற்ற ஆய்வாளர்களாலும், அறிஞர்களாலும் மறுத்துரைக்கப்படுவதில்லை. மேலும் இத்தகைய கிளிப்பிள்ளை வாதங்கள் முற்போக்குப் பார்வையுடைய அறிஞர்கள் உள்ளத்திலும் செல்வாக்குப் பெற்றுவிட் டதோ என்னும் ஐயம் ஏற்படுகிறது. திராவிட மொழிகளின் தொன்மையை ஏற்றுக்கொள்வதில் முற்போக்கு அறிஞர்கள் காட்டும் தயக்கமும் சமற்கிருதத்துக்குக் கற்பித்துக் கூறப்படும் தொன்மையை மறுத்துரைக்கும் ஆய்வுகளை முன்மொழியாத அமைதியும் வருந்தத்தக்கன. இதன்விளைவாக வரலாற்றைப் புரிந்து கொள்ளுதற்குரிய முறையான…