தேவதானப்பட்டியில் நிலங்களைக் கைப்பற்றும் கும்பல்
தேவதானப்பட்டிப் பகுதியில் இடைத்தரகர்கள் மூலம் நிலங்களைக் கைப்பற்றும் கும்பல் தேவதானப்பட்டிப் பகுதியில் உள்ள நிலங்களை வத்தலக்குண்டு சார்-பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் தற்காலிகப் பணியாளர்கள், இடைத்தரகர்கள் சேர்ந்து நிலங்களை விற்பனை செய்து வருகின்றனர். தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டி, கெ.கல்லுப்பட்டி, தேவதானப்பட்டி கிழக்குப்பகுதி, புல்லக்காபட்டி, அட்டணம்பட்டி, கோட்டார்பட்டி முதலான ஊர்களுக்கு வத்தலக்குண்டு சார்-பதிவாளர் அலுவலகத்தில்தான் பத்திரப்பதிவு நடக்கும். கடந்த 3 ஆண்டுகளாகப் போதியமழையின்மையால் இப்பகுதியில் உள்ளவர்கள் பெரும்பாலோனோர் திருப்பூர், கோயம்புத்தூர், கேரளா போன்ற பகுதிகளுக்குச் சென்றுவிட்டனர். இதனால் இடைத்தரகர்கள், பத்திரப்பதிவு செய்பவர்கள் ஆகியோர்…