தேனி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை இசைவில்லாமல் தோண்டப்படும் சாலைகள்   தேவதானப்பட்டிப் பகுதியில் தனியார் தோட்டங்களுக்குத் தண்ணீர் கொண்டு செல்வதற்குச் சாலைகளில் அகழ்பொறிகளைக்கொண்டு தோண்டுவதால் சாலைகள் விரைவில் பழுதாகின்றன.   தேவதானப்பட்டி அருகே உள்ள செயமங்கலம் ஊராட்சிப்பகுதியில் குளம், ஏரிகளின் அருகில் வேளாண் நிலங்களை வாங்கித் தனியார் நிறுவனங்கள் ஆழ்துளைக்கிணறுகளை அமைத்துள்ளனர்; தங்களது தோட்டங்களுக்கும் கனிமநீர்த்தொழிலுக்கும் தண்ணீரைக் கொண்டு செல்கின்றனர். இதற்கென இரவோடு இரவாகச் சாலையைத் தோண்டிக், குழாய்யைகளைப் பதித்து விடுகின்றனர். மிகுபளு ஊர்திகள் செல்லும்போது குழாய்கள் உடைப்பு ஏற்படுகிறது. இவ்வாறு குழாய்கள் உடைப்பு ஏற்படும்பொழுது…