தோழர் தியாகு எழுதுகிறார் : தேரான் தெளிவு
(தோழர் தியாகு எழுதுகிறார் : ஈழத் தமிழர் முதுகில் குத்தும் இந்திய வல்லரசு!- தொடர்ச்சி) தேரான் தெளிவு ”தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்” திருக்குறள் 510 நடைபெறும் 2024 பொதுத் தேர்தல் குறித்துத் தமிழகத்துக்கு வெளியே வாழும் தமிழர்களிடையே பெருங்கவலையும் அக்கறையும் இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. புலம்பெயர் தமிழர்கள் நடத்தும் ஊடகங்கள் இவ்வகையில் செய்தியும் கருத்தும் வெளியிட்டு வருகின்றன. சில காட்சி ஊடகங்ளுக்கு நான் செவ்வி கொடுத்துள்ளேன். சில இணைய இதழ்களுக்குக் கட்டுரையும் எழுதிக் கொடுத்துள்ளேன். உலகத்…