கருத்தரங்கு 1: இந்தியால் தமிழுக்குக் கேடு!
-சா.வி. இராசேந்திரதாசன், தேனி 1937ஆம் ஆண்டில் தமிழ்ப் பெரியார் மறைமலை அடிகள், பரிதிமாற் கலைஞர் தி.ருவி.க. பசுமலை பாரதியார் ஆகிய தமிழ்ப் பெருமக்கள் தொடங்கிய தனித்தமிழ் இயக்கத்தின் மணம், தமிழகத்து மூலை முடுக்குகளில் உள்ளவர்களையெல்லாம் மொழியுணர்வு மிக்கவர்களாய் எழுச்சி பெறச் செய்து தமிழ் மொழிக்கு மறுமலர்ச்சி அளித்தது. அன்றுதொட்டு இந்திமொழி இந்நாட்டை ஆளத் தகுதியற்றது என மொழித்துறை அறிஞர் பலர் தம் கருத்துக்களைத் தெளிவுபடுத்தி வந்துள்ளனர். நாடோறும் நல்ல தமிழ் வழங்கும் நாட்டம் உடையவராய்த் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் நண்பர் திரு. பாரதம், எம்.சி….