தோழர் தியாகு எழுதுகிறார் 27: தீரன் திண்ணியன் தேசத் தலைவன்
(தோழர் தியாகு எழுதுகிறார் 26 : ஏ. எம். கே. (7): தொடர்ச்சி) தீரன் திண்ணியன் தேசத் தலைவன் “களம்புகல் ஓம்புமின், தெவ்விர்! போர் எதிர்ந்து,எம்முளும் உளன்ஒரு பொருநன்; வைகல்எண் தேர் செய்யும் தச்சன்திங்கள் வலித்த கால்அன் னோனே.” (புறநானூறு 87) “நாள் ஒன்றுக்கு எட்டுத் தேர் செய்யும் தச்சன் ஒரு மாத காலம் முயன்று உழைத்துச் செய்த தேர்ச் சக்கரத்தின் ஆரக்கால் போன்ற போர்வீரன் எம்மிடம் உள்ளான். சண்டைக்கு முண்டியடித்து வராதீர், பகைவரே!” பகையரசின் அகந்தையை அறுத்திட இவ்விதம் எச்சரித்தாள் ஔவை. தமிழ் என்றால் வீரம் என்று பெருமிதம் கொள்ளும்…