தன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 3/3 – க.வி.விக்கினேசுவரன்
(தன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 2/3 தொடர்ச்சி) தன்னாட்சி கொடுப்பது காலத்தின் கட்டாயம் 3/3 நாங்கள் வடக்கு – கிழக்கு இணைப்பைக் கேட்பதன் காரணம் என்ன? ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கிலமே ஆட்சி மொழியாக இருந்தது. தமிழ், சிங்கள மொழிகள் இரண்டுக்கும் நிகரான நிலை அளிக்கப்பட்டு வந்தது. ஆங்கிலேயரிடம் இருந்து நாடு எமக்குக் கைமாறியதும் பெரும்பான்மையினர் சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டு வந்து சிங்கள மொழியின் வல்லாட்சியை (ஆதிக்கத்தை) நாடு முழுவதும் திணித்தனர். முழு நாடும் சிங்கள பௌத்த நாடே என்ற,…