தமிழ் மக்களை விடுதலைப் பெருவழியில் அழைத்துச் சென்ற தந்தை செல்வநாயகம்!
தமிழ்த் தேசியத்துக்கு நீர் வார்த்து, உரம் போட்டுத் தமிழ் மக்களை விடுதலைப் பெருவழியில் அழைத்துச் சென்றவர் தந்தை செல்வநாயகம்! (ஈழத் தந்தை செல்வநாயகம் அவர்களது 119-ஆம் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை) தமிழர்களுடைய விடுதலைப் போராட்டத்திற்கு நீண்ட வரலாறு உண்டு. இருபத்தேழு ஆண்டுகள் (1956 – 1983) அறப் போராட்டம், மேலும் 26 ஆண்டுகள் (1983 – 2009) ஆயுதப் போராட்டம், இப்பொழுது கடந்த 8 ஆண்டுகளாக அறப் போராட்டம். மீண்டும் தொடக்கப் புள்ளியில் வந்து நிற்கிறோம். அறப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கியவர்…
இலங்கை அரசே! இராணுவத்திடம் சரணடைந்த எமது தமிழ் உறவுகள் எங்கே? – கவனயீர்ப்பு ஒன்றுகூடல்
அனைத்துலகக் காணாமற்போனோர் நாளில் (ஆகத்து 30) ஈழத் தமிழருக்கு நீதிகோரி காலை 10:30 மணிக்கு, அடையாறு ஐ.நா. (கஅபபஅ /யுனெசுகோ) அலுவலகம் முன்பு கவனயீர்ப்பு ஒன்றுகூடல். இலங்கை அரசே! இராணுவத்திடம் சரணடைந்த எமது தமிழ் உறவுகள் எங்கே? அனைத்துலகக் காணாமற்போனோர் நாள் (International Day of the Disappeared) ஒவ்வோர் ஆண்டும் ஆகத்து 30 ஆம் நாள் உலகெங்கும் கடைபிடிக்கப்படுகின்றது. கோசுடோரிக்காவில் 1981 இல் தொடங்கப்பட்ட கைதாகிக் காணாமல் போவோரின் உறவினர்களின் கூட்டமைப்பு (Federation of Associations for Relatives of…