நினைவேந்தலுக்குத் தடை! : சிங்கள ஆட்சியில் இருக்கிறோமா? – இலக்குவனார் திருவள்ளுவன்
நினைவேந்தலுக்குத் தடை! : சிங்கள ஆட்சியில் இருக்கிறோமா? இறந்தவரைப் போற்றுவது என்பது உலகம் தோன்றியது முதலே உலக மக்களிடம் இருக்கும் பழக்கம். தமிழ் மக்கள் இந்தப் பண்பாட்டில் திளைத்தவர்கள். எனவே, இறந்தவர்களைத் தெய்வமாகக் கருதி வணங்கும் பண்பாடு காலந்தோறும் நிலைத்து நிற்கிறது. இன்று நாம் வணங்கும் தெய்வம் பலவும் வழி வழி, வழிபட்ட இறந்தவர்களே! துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. (திருவள்ளுவர், திருக்குறள் 42) என இறந்தவரைப் போற்றல் இல்லறத்தான் கடமை என்கிறது உலகப்பொதுநூல். இறந்தபின்னர் எவ்வாறு துணை…