சிங்களஇலங்கை சென்றடைந்தன இந்தியப் போர்க் கப்பல்கள்
தமிழ் இனத்தை அழித்த சிங்களஇலங்கையுடனான உறவை முறிக்குமாறு தமிழ்நாட்டுத் தமிழர்கள் தொடர்ந்து கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வரும் நிலையில் இந்திய – சிங்களஇலங்கைக் கடற்படை உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் தன் போர்க்கப்பலை இந்திய அரசு இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்தியா – சிங்களஇலங்கை இடையே கடற்படை உறவை மேலும் நெருக்கமாகக் கட்டமைப்பதற்காக இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான வானூர்தி தாங்கிப் போர்க்கப்பல் இந்தியக்கப்பற்படை நாவாய்(ஐ.என்.எசு) விக்கிரமாதித்யா இலங்கைக்கு 21.01.2016 அன்று சென்றடைந்தது. இது குறித்து நடுவணரசு வெளியிட்ட…
தயாமோகன் விளக்கும் கருணாவின் இரண்டகம் – பா.ஏகலைவன்
விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண அரசியல்துறை பொறுப்பாளர் தயாமோகனின் மனம் திறந்த பேட்டி.. விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாணக் கட்டளைத் தளபதியாகவும், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைச் சந்திக்கச் செல்லும்போது துப்பாக்கியை உடன் கொண்டுசெல்ல இசைவளிக்கப்பட்ட புலிகள் தளபதிகளில் ஒருவருமான கருணா, விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்றபோது கிழக்கு மாகாண அரசியல் பொறுப்பாளராகப் பணியாற்றியவர் தயாமோகன்; விடுதலைப்புலிகள் இயக்கத்தில் 20ஆண்டு காலம் பணியாற்றியவர். 2009 மே மாதம் முள்ளிவாய்க்கால் போர் முடிவுற்றதாக அறிவிக்கப்பட்ட பின்னர் காட்டுக்குள் இருந்து சூன் மாதம் இசுலாமிய நண்பர்…
நாடகமன்றோ நடக்கிறது! ஐ.நா-வில் அமெரிக்கத் தீர்மானங்கள்
ஐ.நா.-வில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்கத் தீர்மானத்தின் முழுமையான வடிவம் பல கண்ணோட்டங்களையும், எதிர்வு கூறல்களையும் கொண்டதாகவும், தமிழர்களினதும் பன்னாட்டினதும் எதிர்பார்ப்பைக் கொண்டதுமான அமெரிக்கத் தீர்மானம் ௧-௧௦-௨௦௧௫ (1.10.2015) வியாழக்கிழமை அன்று வாக்கெடுப்பின்றி ஒருமனமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை ‘இலங்கையில் பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவித்தல்’ என்ற தலைப்பில் அமெரிக்காவினால் இலங்கை குறித்தான திருத்தப்பட்ட தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வரைபை விடத் திருத்தப்பட்ட புதிய தீர்மானத்தில் பல விதயங்கள் மாற்றப்பட்டுள்ளன. முன்னைய வரைபில் காணப்பட்ட சில பத்திகள் சுருக்கப்பட்டுள்ளதுடன் 26 பத்திகள் 20 பத்திகளாகக்…