பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 1/8 – கருமலைத்தமிழாழன்
பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 1/8 தமிழ்த்தாய் வாழ்த்து கடல்பொங்கி நிலம்மூழ்கி அழிந்த போதும் களப்பிரரின் இருட்கால ஆட்சி தம்மில் இடம்சிறிதும் கொடுக்காமல் தடுத்த போதும் இனிமையான பாசுரங்கள் பாடா வண்ணம் கடலுக்குள் கல்கட்டிப் போட்ட போதும் காளவாய்க்குள் உடல்வேக நுழைத்த போதும் விடவாயால் கரையான்கள் அரித்த போதும் வீழாத தமிழன்னையை வணங்கு கின்றேன் ! அணியாகக் காப்பியங்கள் இருந்த போதும் அறநூல்கள் நுதல்பொட்டாய்த் திகழ்ந்த போதும் மணியாக இலக்கணங்கள் ஒளிர்ந்த போதும் மணிப்பிரவாள நடையினில் எழுதி யுள்ளே பிணியாக…