சித்திரை விருது மாசியிலேயே ஏன்? அரசு நிலைக்கும் என்ற நம்பிக்கை இல்லையா? – இலக்குவனார் திருவள்ளுவன்
சித்திரை விருது மாசியிலேயே ஏன்? அரசு நிலைக்கும் என்ற நம்பிக்கை இல்லையா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருதுகளை ஐம்பத்து அறுவருக்கு (மாசி 08, 2050 / 19.02.2019) தலைமைச்செயலகத்தில் வழங்கியுள்ளார். விருதாளர்களுக்குப் பாராட்டுகள்! மேலும் தமிழ்த்தொண்டாற்ற வாழ்த்துகள்! பொதுவாக விருதுகளை முந்தைய நாள் அல்லது கடைசி நேரம் அறிவிப்பதையே அரசு வழக்கமாகக் கொண்டுள்ளது. காலங்கடந்தும் அறிவித்துள்ளனர். சான்றாக ஒவ்வொரு தை 2 ஆம் நாளும் திருவள்ளுவர் திருவிழாவைத் தமிழ்நாடு அரசு கொண்டாடும். அப்பொழுது திருவள்ளுவர் விருதையும் பிற ஆன்றோர்கள் பெயர்களிலான…