நல்லிசைப் புலமையிற் சிறந்த வெள்ளிவீதியார் – இரா.இராகவையங்கார்
திருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார் : 2
(திருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார் : 1 தொடர்ச்சி) திருவள்ளுவர் 2. தெய்வப் பாவலராக வள்ளுவரைச் சங்கப் பழம்புலவர்கள் கூறுவதால். அவர் தமக்கு வள்ளுவர் நீண்டகாலத்துக்கு முற்பட்டவராகவும். அவரறநூலின் இறவாச்சிறப்பு அங்கீகரிக்கப்படுதற்குப் போதிய அவகாசம் அக்குறளுக்கும் அதனடிகளைப் பாராட்டி எடுத்தாளும் சங்கப்பனுவல்களுக்கும் இடையே ஏற்பட்டிருக்கவும் வேண்டும். இது சம்பந்தமாய்த் திருக்குறளடிகளைச் சிந்திக்கச் செய்யும் சில சங்கச் செய்யுட்டொடர்களை ஈண்டுக் குறிப்போம் :- இடுக்கண்கால் கொன்றிட விழு மடுத்தூன்றும் நல்லா ளிலாத குடி. (1030) தூங்குசிறை வாவலுறை தொன்மரங்க ளென்ன ஓங்குகுல நையவத னுட்பிறந்த…