சிம்புவின் மறைப்போசைப் பாடலும் மகளிர் அமைப்புகளும்
சிறியன சிந்திக்கலாமா? சிந்தனையைச் சிதற அடிக்கலாமா? திடீரென்று விழிப்படைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மகளிர் அமைப்புகள் குறித்துக் காண்பதற்கு முன் சிலம்பரசன் செயல்பாடு குறித்துக் காண்போம். சிம்பு என்னும் சிலம்பரசனின் செயல் பண்பாடற்றது. மழலை நிலையிலிருந்தே திரைத்துறையில் இருப்பவர்; நடிகர், பாடகர், இசையமைப்பாளர் முதலான பல்வேறு துறைகளில் தந்தை வழியில் மலர்ந்து பல்துறை வித்தகராக வலம் வருபவர்; மேலும் பல முன்னேற்றங்களைக் காணும் திறமையும் வாய்ப்பும் உள்ளவர்; காதலில் தோல்விகளைச் சந்தித்த பொழுதும் தாடி வளர்த்து ஊக்கமிழந்து சோர்வடையாதவர்; தன்னம்பிக்கை மிக்கவர். இத்தகைய…