தோழர் தியாகு எழுதுகிறார் : சியான் நிகழ்ச்சி
(தோழர் தியாகு எழுதுகிறார் : தேரான் தெளிவு- தொடர்ச்சி) சியான் நிகழ்ச்சி புரட்சியாளர்கள் – பொதுமையரானாலும் மற்றவர் ஆனாலும் – கடைப்பிடிக்கும் ‘ஒற்றுமை முன்னணி’ என்ற உத்தி பகடிக்குரிய ஒன்றன்று. ஒற்றுமை (ஐக்கிய) முன்னணி என்பதெல்லாம் போருக்கு மட்டுந்தான், அது அரசியலுக்குப் பொருந்தாது என்பதும் சரியான பார்வையன்று. அரசியல் என்பது குருதி சிந்தாப் போர்! போர் என்பது குருதி சிந்தும் அரசியல்! அரசியலின் நீட்சியே போர்! இருப்பினும் ஒற்றுமை முன்னணி (ஐக்கிய முன்னணி) என்ற பேச்சுக்கே உள்நோக்கம் கற்பிக்கிறார் அன்பர் மருது. ”தேர்தல் நெருங்கினாலே…