சிங்கப்பூரில் அண்ணா வாசகர் அறிவகம் தொடக்கம்
உலகத் தமிழருக்கு உறவாக விளங்கியவர், பேரறிஞர் அண்ணா அவர்கள். அவர்களின் நிணைவாக ‘அண்ணா வாசகர் அறிவகம்’ தை 24, 2047 / 7.2.2016 ஞாயிற்றுக்கிழமை இரவு 7:30மணியளவில் , தமிழர்பேரவை பன்னோக்குக் கூட்டுறவுக் கழக பணிமனையில் #02-19 , சிராங்கூன் தேக்கா குட்டி இந்தியா வணிக வளாகத்தில் தோற்றுவிக்கப்பட்டது. அறிஞர் அண்ணாவின், இலக்கியப் பங்களிப்பில் ஆர்வம் கொண்டுள்ள நண்பர்களால் உருவானதுதான் ‘அண்ணா வாசகர் அறிவகம்’. கவிதை, கதை, கட்டுரை வழியாக, கன்னித் தமிழின் சுவையைப் பரப்புதல், பேசுதல், படைத்தல் என்பதே இதன் நோக்கமாகும்….
சிராங்கூன் : பொங்கல் கொண்டாட்டங்கள்
ஒளியூட்டு விழா : மார்கழி 23, 2046 / சனவரி 08, 2016 பொங்கல் கொண்டாட்டங்கள்: மார்கழி 24, 2046 / சனவரி 09, 2016 முதல் தை 03, 2047 / சனவரி 17, 2016 முடிய