தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙே) – இலக்குவனார் திருவள்ளுவன்
[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙெ) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙே) இதழாயுதம் ஏந்திய போராளி – தொடர்ச்சி பெரியார் அவர்கள், தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டுப் பிரிவினையை வேண்டப் போவதாக அறிவித்துள்ளார்கள். ஆனால், தேர்தலில் காங்கிரசுக்கட்சி வெற்றி பெற உழைத்துவிட்டுப் பின்னர்ப் பிரிவினை கேட்கப் போகிறேன் என்பது அறிவுக்குப் பொருந்துவதாக இல்லை. மொழிவழி மாநிலங்கள் உரிமையுடன் வாழ வேண்டுமானால் காங்கிரசுக்கட்சி மறையவேண்டும். காங்கிரசுக்கட்சியால்தான் மாநிலங்கள் உரிமையற்றுக் கிடக்கின்றன. ஒரே இந்தியா என்ற கொள்கையை உறுதியாகப்பற்றி நிற்கும் காங்கிரசை அகற்றினாலன்றிப் பிரிவினைக் கொள்கை வெற்றி…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙெ) – இலக்குவனார் திருவள்ளுவன்
[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙூ) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙாஙெ) இதழாயுதம் ஏந்திய போராளி – தொடர்ச்சி அப்போதைய ஆளுநர் திரு சிரீபிரகாசா அவர்கள், “ஆடவர்கள் வெறித்துப் பார்ப்பதை மறுக்கும் ஒரு பெண்ணைக் கூட நான் இதுவரை சந்தித்ததில்லை” எனப் புதிய மண்டபத்திறப்பு விழா ஒன்றில் பேசினார். இது குறித்த கண்டனைக் கணைகளை விடுக்கப் பேராசிரியர் இலக்குவனார் தவறவில்லை. பின்வரும் பேராசிரியர் இலக்குவனாரின் உரையே அவரின் தமிழ்க்காப்பு உணர்வை வெளிப்படுத்தும். “பந்தயம் பார்க்கவும் பதக்கங்கள் வழங்கவும் கட்டடத் திறப்பு விழாக்களில்…
தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார் 2/3 – மறைமலை இலக்குவனார்
(தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார் 1/3 தொடர்ச்சி) தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார் 2/3 1933-ஆம் ஆண்டில் திருவையாறு அரசர் கல்லூரிப் புலவர் மாணாக்கராக இருந்தபோதே ‘எழிலரசி’என்னும் குறுங்காப்பியத்தை இயற்றி வெளியிட்டார் இலக்குவனார். 1930களில் புரட்சிக்கவிஞர் படைத்த கவிதைகளிலும் குறுங்காப்பியங்களிலும் வடமொழியின் வாடை தூக்கலாக இருந்தது. ஆனால் இலக்குவனாரின் “கதைபொதி பாட்டு” முற்றும் தனித்தமிழாலேயே இயன்றது. 1936-இல் தஞ்சை நாட்டாண்மைக் கழகப் பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணியேற்ற இலக்குவனார் தாம் பணியாற்றிய பள்ளிகளிலெல்லாம் தொல்காப்பியர் விழா, திருவள்ளுவர் விழா, இளங்கோவடிகள் விழா, ஔவையார்…