இந்தோனேசியத் தமிழர் கோபாலனிடம் சந்தர் சுப்பிரமணியம் நேர் காணல் 2/2
(இந்தோனேசியத் தமிழர் கோபாலனிடம் சந்தர் சுப்பிரமணியம் நேர் காணல் 1/2 தொடர்ச்சி) இந்தோனேசியத் தமிழர் கோபாலனிடம் சந்தர் சுப்பிரமணியம் நேர் காணல் 2/2 ? தமிழ் பேசும் வழக்கம் தமிழர்களின் வீடுகளில் குறைந்துவரும் இந்தக் காலத்தில் தமிழ்ப்பண்பாட்டுக்குரிய வேறு செயல்கள் தொடர்ந்து பழக்கத்தில் உள்ளனவா? கோயிலுக்குச் செல்லுதல், திருமணங்களில் சடங்குகள், குழந்தைகளுக்குப் பெயர் வைத்தல் போன்றவற்றில் இன்னும் பண்பாட்டு வழக்கங்கள் கையாளப்பட்டு வந்தாலும், மெதுவாக அவை மாறிவருகின்றன. தமிழ்ப்பெயர்கள் இப்போது குறைந்து வருகின்றன. ? இந்தோனேசியாவில் தமிழ்வழித்தோன்றல்கள் குறிப்பாக எந்தப் பகுதிகளில் மிகுந்து காணப்படுகிறார்கள்?…