திருக்குறளும் “ஆற்றில் போட்டாலும் அளந்து போடு” பழமொழியும் – இலக்குவனார் திருவள்ளுவன்
ஊழித் தொடக்கத்தில் பிறந்தவன் யார்? – ப.மு.அன்வர்
ஊழித் தொடக்கத்தில் பிறந்தவன் யார்? ஓசைக் கிளர்ச்சியினால் உருண்டுவரும் உலகத்தில் ஆசைக் கிளர்ச்சியினால் அமைவதுதான் உயிர் வாழ்க்கை ஆசைக் கிளர்ச்சி அடர்ந்தெரியும் நேரத்தும் ஓசையின்றி வாழ்ந்த ஒருகாலம் குகைக்காலம் ஊழித்தொடக்கத்தில் ஊமையரின் கூட்டத்தில் பாழைப் பதுக்கியவன், பயிலுமொழி பகர்ந்தவன்யார்? அவிழ்ந்தவாய் அசைவில் அகரம் பிறந்துவர உவந்தொலிகள் ஒவ்வொன்றாய் ஒலித்துவரக் கற்றவன்யார்? ஒலியலைகள் ஒவ்வொன்றாய் எழும்பி ஒருங்கிணைந்து தெளிவான சொல்லமையக் கண்டு தெளிந்தவன்யார்? குறில்நெடிலின் வேற்றுமையைக் குறித்தறிந்து முதன்முதலில் அறிவறியும்…