உலகமயமாக்கலினால் நலிவடைந்து வரும் நாட்டுப்புறவழிபாடுகள்
உலகமயமாக்கலினால் நலிவடைந்து வரும் நாட்டுப்புறவழிபாடுகள் உலகமயமாக்கலின் அதிவேகமான நடைமுறைப்படுத்தலில் பண்டைய மரபுகள், குழுஇனங்காணுதல், அடையாளப்படுதல் ஆகியன மறைந்து போய் ஒரே பண்பாட்டுத்துறை நடைமுறையிலாகிவிடும் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதனால் நாட்டுப்புறவியல் என்பது மீள் விளக்கம் செய்யப்படவேண்டும் என்னும் கருத்து வேகமாகப் பரவிவருகின்றது. புதிய குடியேற்ற ஆதிக்கத்தின் விளைவைக் குமுகாயத்தில் கண்டறிந்து எதிர்விளையாற்றவேண்டிய காலத்தின் கட்டாயம் நாட்டுப்புறவியல் அறிஞர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. அறிவியல் வளர்ச்சியானது குறிப்பிட்ட அளவு மக்கள் பண்பாட்டையும் பழக்க வழக்கங்களையும் பாதித்திருக்கிறது. சிற்றூர்கள் அழிந்து நகரங்களாக மாறிவருகின்றன. விளைநிலங்கள், ஏரிகள்,…