வைகை அணையில் பேணப்படாமல் உள்ள பூங்காக்கள் தேனிமாவட்டத்தில் உள்ள வைகை அணையில் பூங்காக்கள் பேணப்படாமல் உள்ளதால் சிறுவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். வைகை அணையில் பொழுது போக்குவதற்காகப் பூங்காக்கள், சிறுவர்கள் விளையாட்டுத்திடல், இராட்டினம், சறுக்கி விளையாடும் இடம், தொடரி(இரயில்வண்டி), பாரஉந்து போன்ற பொழுது போக்குவாய்ப்புகள் நிறைய உள்ளன. மேலும் சிறுவர்கள் தனியாக விளையாடுவதற்குத் தனியாக சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது சிறுவர்கள் விளையாடும் பூங்காக்களுக்குத் தனியாக நுழைவுக்கட்டணம் பெறப்படுகிறது. கட்டணம் வாங்கியும் எந்த வித அடிப்படை வசதியும் பொதுப்பணித்துறை சார்பில் செய்துதரப்படவில்லை. இதனால் இப்பகுதியில் விளையாடும்…