தேவதானப்பட்டியில் அழிந்து வரும் சிற்பக்கலை
தேவதானப்பட்டி பகுதியில் சிற்பக்கலை அழிந்து வருகிறது. அதனைக் காப்பாற்ற நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். தேவதானப்பட்டி அருகே உள்ள அ.வாடிப்பட்டி பகுதியில் சிலைகள் வடிவமைக்கத்தேவையான திறனுடைய கற்கள் அதிகம் உள்ளன. மறைந்த முன்னாள் தலைமையாளர் இராசீவு காந்தி அவர்களுக்குத் திருப்பெரும்புதூரில் சிலை அமைக்க இப்பகுதியில் இருந்துதான் கற்கள் கொண்டு செல்லப்பட்டன. அவ்வளவு பெருமை வாய்ந்த கற்கள் இப்பகுதியில் உள்ளன. இப்பகுதியில் உள்ள பழமையான கோயில்கள், கற்சிலைகள் அனைத்தும் அ.வாடிப்பட்டி பகுதியில் இருந்த கற்களைக் கொண்டு சிலை வடிவமைக்கப்பட்டன….