வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 39(2.09). சிற்றினம் விலக்கல்
[வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 38(2.08) தொடர்ச்சி] மெய்யறம் இல்வாழ்வியல் 39. சிற்றினம் விலக்கல் சிற்றினங் குணத்திற் குற்றமிகு மாக்கள்; சிற்றினம் என்பவர் தனது குணநலன்களில் குறைகளை உடையவர்; பெருமிதந் தன்னைப் பேணா மாக்கள்; தன்னுடைய மதிப்பைப் பேணிப் பாதுகாக்க இயலாதவர்கள்; அற்பத் தன்மை யளாவிய மாக்கள்; சிறுமைக் குணங்களை விரும்புபவர்கள்; பொறியின் பங்களிற் செறிவுறு மாக்கள்; ஐம்புலன்களினால் கிடைக்கும் இன்பங்களில் தம்மை அதிகமாக ஈடுபடுத்திக் கொள்பவர்கள்; சுயநயங் கருதும் பயனிலா மாக்கள். தம் நலத்தையே எப்பொழுதும் எண்ணும் சுயநலம் உடையவர்கள் ஆகியோர் ஆவர். சிற்றினம்…