தன்னம்பிக்கையுடன் போட்டியிட்டால் வெற்றிபெற முடியும்
தன்னம்பிக்கையுடன் போட்டியிட்டால் வெற்றிபெற முடியும் – சிலம்பாட்ட வீரர்களுக்கு மாவட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளர் அறிவுரை வந்தவாசி. நவம்.29. தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகத்தின் திருவண்ணாமலை மாவட்டஅளவிலான சிலம்பாட்டப் போட்டிகளில் வென்ற சிலம்பாட்ட வீரர்களுக்குப் பதக்கமும்,பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கும் விழா வந்தவாசி சிரீ அகிலாண்டேசுவரி மகளிர் கல்லூரிகலையரங்கில் நேற்று நடைபெற்றது. திருவண்ணாமலை முன்னாள் மாவட்ட ஆட்சித் தலைவரும் தமிழ்நாடு சிலம்பாட்டக்கழக மாநிலத் தலைவருமான முனைவர் மு.இராசேந்திரன், இ.ஆ.ப., தலைமையின் கீழ்ச் செயல்படும் திருவண்ணாமலை மாவட்டச் சிலம்பாட்டக் கழகத்தின் மாவட்ட அளவிலானபோட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பதக்கமும் பாராட்டுச் சான்றிதழ்களும்வழங்கப்பட்டன. …