சிலம்பொலிச்செல்லப்பன் அவர்களின் 85 ஆம் பிறந்தநாள் விழா – இளங்கோ விருது வழங்கல்
புரட்டாசி 5, 2045 / 21.09.2014 : தமிழறிஞர் சிலம்பொலிச்செல்லப்பன் அவர்களின் 85 ஆம் அகவை நிறைவை யொட்டிச், “சிலப்பதிகாரப் பெரு விழா’’ எனும் விழா சென்னை ஏ.வி.எம். இராசேசுவரி அரங்கில் நடைபெற்றது. காலையில், பிறந்த நாளை முன்னிட்டுச் சிலப்பதிகார அறக்கட்டளையை, தி.மு.க. பொதுச்செயலர் பேராசிரியர் க.அன்பழகன் தொடங்கி வைத்தார். இவ்விழாவில் சிலப்பதிகார அறக்கட்டளையின் சார்பில் தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு, “இளங்கோ விருதினை’’ நீதியரசர் அரு.இலக்குமணன் அவர்கள் வழங்கினார். விருதுடன் ‘பூம்புகார் சிற்பி’ என்ற பட்டமும், ஓர் இலட்ச உரூபாய்க்கான பொற்கிழியும் வழங்கப்பட்டன….