சிலம்பொலி செல்லப்பனார்க்குப் பாவலர்களின் புகழ்வணக்கம்
சிலம்பொலி செல்லப்பனார்க்குப் பாவலர்களின் புகழ்வணக்கம் இலக்கிய அமைப்புகளின் சார்பில் சித்திரை முதல் நாள், 14/4/19 அன்று மாலை சென்னை கவிக்கோ மன்றத்தில் சிறப்பாக நடந்தது. அன்று ஞாயிறு என்பதாலும் சித்திரை முதல் நாள் என்பதனாலும் நிலவிய நிகழ்ச்சி நெருக்கடிகளைப் புறந்தள்ளி நல்ல கூட்டம் கூடியது. வேறொரு நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டிய கவிஞர் மு.மேத்தா இந் நிகழ்வைக் கேள்விப்பட்டு சிலம்பொலியார்க்குப் புகழவணக்கம் செலுத்த வந்தது குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் மின்னூர் சீனிவாசன், வேணு குணசேகரன், ஏர்வாடி இராதாகிருட்டிணன், அமுதா பாலகிருட்டிணன், இரவி தமிழ்வாணன்,பெரு.மதியழகன், தமிழமுதன், தமிழ்முதல்வன், முனைவர்…