கடைநிலை மாறுமா ? – சிலேடைச் சித்தர் சேதுசுப்பிரமணியம்
கடைநிலை மாறுமா ? மது கொடுக்கும் மயக்கத்தால் மதியிழக்கும் மாக்களெல்லாம் நிதியிழப்பார் , மன நிம் – -மதியிழப்பார் , குடல் கெட்டு , உடல் கெட்டு உயிரிழப்பார் .குடும்பத்தார் கதியிழப்பார் , மங்கலப் பெண்டிரெல்லாம் மங்களம் இழப்பார் , மண் கலமாய் உடைந்திடுவார் மகன்கள் கல்வியிழப்பார் , மகள்கள் மணமிழப்பார் . சந்தடி ஏதுமின்றி சந்ததியே மறைந்துவிடும். இரக்கமின்றி அழிக்கும் அரக்கன் என்பதனால்தான் ஆங்கிலத்தில் ‘ ARRACK ‘ என்றழைத்தாரோ . ‘குடி குடி கெடுக்கும் ‘ என்று பொடி எழுத்தில்…