தொல்காப்பிய ஓவியப்போட்டி – மொத்தப் பரிசு உரூபாய் 25,000

தொல்காப்பிய ஓவியப்போட்டி – மொத்தப் பரிசு உரூபாய் 25,000   கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காப்பிக்காடு என்னும் ஊரில் தொல்காப்பியருக்குச் சிலை எழுப்பப்பட்டுள்ளது. அச்சிலையைச் சுற்றி எண்மாடக்கூடமும் உச்சித்தளமுமாக 9 தளங்கள் கொண்ட தொல்காப்பியர் கோபுரம் அமைக்கத்திட்டமிடப்பட்டுள்ளது.   சிற்பங்களாகவும் ஓவியங்களாகவும் கல்வெட்டுகளாகவும் தொல்காப்பியர், தொல்காப்பியம்பற்றிய செய்திகளும் தொல்காப்பிய விளக்கப் படங்களும் அமைய உள்ளன. எனவே, தொல்காப்பியர் குறிப்பிடும் அறிவியல் செய்திகள் தொல்காப்பியர் குறிப்பிடும் மெய்ப்பாட்டுச்செய்திகள் தொல்காப்பியர் குறிப்பிடும் அகத்திணைச் செய்திகள் தொல்காப்பியர் குறிப்பிடும் புறத்திணைச் செய்திகள் எனப் பல்வேறு  கருத்துகளை விளக்கும் ஓவியங்கள் வரவேற்கப்படுகின்றன….

காந்தி இலங்கையரா? அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்? – செந்தமிழினி பிரபாகரன்

காந்தி இலங்கையரா?  அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்?      எங்கள் தமிழீழ மண்ணில் எமக்காக ஈகைச் சாவெய்திய தமிழக தொப்புள் கொடி உயிர் கொடுத்த தோழர்களான முத்துக்குமார் முதலான ஈகியர்களுக்குச் சிலை இல்லை.   மண்ணில் நின்று போராடி வீரச் சாவெய்திய மாவீரர்களுக்கு நினைவாலயங்கள் வைக்கத் தடை.   இருந்த மாவீரர் இல்லங்கள் தகர்க்கப்பட்டு விட்டன..  மாமனிதர் இரவிராசு சிலை ‘மாமனிதர்’ என்ற பட்டம் நீக்கப்பட்டு அரச விசிறிகளால் அவமானப்படுத்தப்படுகின்றது.   ‘அடங்காப்பற்று’ என வன்னி மண்ணை அயலவரோடு போராடிக் காப்பாற்றி…

தொல்காப்பியர் சிலை உருவாக்கத் தொடர் ஆய்வு

தொல்காப்பியர் சிலை உருவாக்கத் தொடர் ஆய்வு     குமரி மாவட்டம் காப்பிக்காட்டில் அமைக்க இருக்கும் தொல்காப்பியர் சிலை உருவாக்கப் பணி, படிமப் பார்வைக் குழுவினரால் மீண்டும் ஆடி 16, 2046 / ஆக.01, 2015 அன்று மீண்டும் பார்வையிடப்பட்டது.   புலவர் த.சுந்தரராசன், புலவர் வெற்றியழகன், இலக்குவனார் திருவள்ளுவன், பாவலர் ம.கணபதி, அனகை நா.சிவன், நாஞ்சில் நடராசன், வளனரசன், தமிழ்த்தென்றல், திருவாட்டி அமுதநம்பி சோழன் நம்பியார், ஆகியோர் சிற்பி இரவியுடன் சிலைகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்துக் கலந்துரையாடினர். அவை வருமாறு: –…

நிறுவ இருக்கும் தொல்காப்பியர் சிலை குறித்த கருத்தைத் தெரிவிக்கவும்

குமரி மாவட்டத்தில் உள்ள காப்பிக்காடு தொல்காப்பியர் பிறந்த ஊராகக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு, தொகாப்பியருக்குச் சிலை அமைத்திடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சிலை வடிக்கும் பணி சென்னையில் நடைபெற்று வருகின்றது. சிலையின் மாதிரி வடிவம் அணியமாகியுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள தொல்காப்பியர் படத்தை ஒட்டி இந்த வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் படம்  தரப்பட்டுள்ளது. அறிஞர் பெருமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன். அன்புடன் முத்து.செல்வன் உறுப்பினர் தொல்காப்பியர் சிலை அமைப்புக் குழு. செயல் தலைவர் அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை

பிரபாகரன் சிலை அகற்றம்: மரு.இராமதாசு கண்டனம்! மாணவர்கள் கூட்டமைப்பு எச்சரிக்கை!

தமிழ்த்தேசிய ஞாலத்தலைவர் பிரபாகரன் சிலை நல்லூரில் அகற்றம்: மரு.இராமதாசு கண்டனம்! போராட்டம் வெடிக்கும் எனத் தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பு  எச்சரிக்கை!   பா.ம.க. நிறுவனர் மரு.இராமதாசு இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்:–  நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த தெற்குப் பொய்கை நல்லூரிலுள்ள கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த ஈழப்போராளி பிரபாகரனின் உருவச்சிலையை காவல் துறையினர் இரவோடு இரவாக அகற்றியிருக்கின்றனர்.  அந்த ஊரில் மின்சாரத்தைத் துண்டித்துவிட்டு பிரபாகரன் சிலையை மட்டும் அகற்றியுள்ளனர். குதிரை சிலை மட்டும் இருக்கும் நிலையில், பிரபாகரன் சிலை…

தொல்காப்பியர் கால்கோள் விழா – ஒளிப்படங்கள்

  குமரி மாவட்டம் காப்பிக்காடு ஊரில் தொல்காப்பியர் படிமம் கால்கோள் விழா சித்திரை 20, 2046 / மே 03, 2015 அன்று நடைபெற்றது. வெட்கக்கேடு! வேதனை! தொல்காப்பியர் விழாவை ஆரியப் பூசையுடன் தொடங்கினர்!  

தொண்டிக் கடற்கரையில் தோண்டத் தோண்ட .. 500க்கும் மேற்பட்ட தெய்வப் படிமங்கள்

திருவாடானை: தொண்டி, நம்புதாளை கடற்கரையில், 500க்கும் மேற்பட்ட கடவுள் சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. அவை, பூப்பதனிடுதல் முறையில், முகலாயர்களிடம் இருந்து பாதுகாக்கப்பட்டவையா எனக் காவல்துறையினர்  ஆராய்ந்து வருகின்றனர்.இராமநாதபுரம், தொண்டி கடற்கரையில், 21.01.14 நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, இப்பகுதியில் நடைப்பயிற்சி சென்றவர்கள், அங்கே, சிறிய  கடவுள் சிலைகள் கிடப்பதைக் கண்டனர்.  அவர்கள், காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சார்புஆய்வாளர் இந்திரா  முதலான காவலர்களும்  மீனவர்களும், கடலில் இறங்கி, மேலும் சிலைகள் இருக்கின்றனவா எனத் தேடினர். இதில்,கடவுள் மந்திர எழுத்து பொறித்த செப்புத்தகடுகள், படிகலிங்கம், பச்சை நி…