உ.வே.சா.வின் என் சரித்திரம் 7
(உ.வே.சா.வின் என் சரித்திரம், 6 இன் தொடர்ச்சி) அத்தியாயம் 4 சில பெரியோர்கள் ஐயாக்குட்டி ஐயர் என் சிறிய பாட்டனாராகிய ஐயாக்குட்டி ஐயர் முதலில் நன்றாக வேதாத்தியயனம் செய்தார்; பிறகு வடமொழியில் காவிய நாடகங்களைக் கற்றார்; இராமாயணம், பாரதம், பாகவதம், ஆலாசிய மாகாத்துமியம் முதலியவற்றைப் படித்து உபந்நியாசம் செய்யும் திறமை அவர்பால் இருந்தது; வைத்தியம், சோதிடம், மந்திரம், யோகம் இவற்றிலும் அவருக்கு நல்ல பயிற்சி உண்டு, சங்கீதமும் வரும்; மலையாளத்தில் இருந்த ஒரு பெரியாரிடம் மந்திர உபதேசம் செய்துகொண்டார். ஒருவர் பின் ஒருவராக மூன்று…