சிவகங்கை அரசு மருத்துவமனையின் பெயரில் இராமச்சந்திரானர் பெயரை நீக்கியது ஏன்? யார்? தமிழ்நாட்டு மக்கள் சாதிப்பட்டங்ளைத் துறப்பதற்கு முன்னோடியாய் விளங்கிய சீர்திருத்தச் செம்மல் சிவகங்கை இராமச்சந்திரனார். பகுத்தறிவு இயக்கத் தலைவர், கல்விப் புரவலர், மது ஒழிப்பைப் பரப்பிய அறவாணர், தமிழ் வளர்த்த தகைமையாளர் எனப் பல சிறப்புகள் கொண்டவர் அவர். அவரது பெயர் சிவகங்கை அரசு மருத்துவமனைக்குச் சூட்டப்பட்டது. ஆனால் அப்பெயர் தந்திரமாக  அகற்றப்பட்டுள்ளது. அவர் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட அருந்தலைவர். 21.12.1991 இல் மதுரையில் தி.மு.க.வின் பவளவிழா மாநாட்டு அரங்கத்திற்குச் சிவகங்கை இராமச்சந்திரனார் பெயர்…