சிறந்த காதல் வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டு
ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வாழ்வதே சிறந்த காதல் வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டு – காதல் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் பேச்சு – அகநி வெளியீட்டகத்தின் சார்பில் வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு ஊரில் நடைபெற்ற ‘காதல் கவிதை’ நூல் வெளியீட்டு விழாவில், வெறும் உடல் கவர்ச்சிக்கான ஈர்ப்பாக இல்லாமல், ஒருவரையொருவர் மனத்தாலும் புரிந்துகொண்டு வாழ்வதே முன்னெடுத்துக்காட்டான காதல் வாழ்க்கையாகும் என்று கவிஞர் மு.முருகேசு பேசினார். இவ்விழாவிற்குத் தொழிலதிபர் இரா.சிவக்குமார் தலைமையேற்றார். மா.குமரன் அனைவரையும் வரவேற்றார். கள்ளக்குறிச்சி கவிஞர் வீ.சிவசங்கர் எழுதிய…