தமிழ் மொழி வேறு; வடமொழி வேறு – அ.கி.பரந்தாமனார்
தமிழ் மொழி வேறு; வடமொழி வேறு தமிழ்மொழி, வடமொழியினின்று தோன்றியது என்று ஒரு சிலர் தவறான உணர்ச்சியினால் பல ஆண்டுகளாய் அறியாது கூறி வந்ததுண்டு. இத்தவற்றுக்குக் காரணம் பல வடசொற்கள் தமிழில் புகுந்திருப்பதேயாகும். வடநூற்கடலை நிலை கண்டுணர்ந்த தவஞானச் செல்வரான சிவஞானயோகிகளும், வடமொழியும், தமிழ் மொழியும் நன்குணர்ந்த மொழிநூலறிஞர் முனைவர் பி. எசு.சுப்பிரமணிய (சாத்திரியாரும்) பிறரும், “வடமொழி வேறு; தமிழ் மொழி வேறு” என்பதை நன்கு எடுத்துக்காட்டி விளக்கியுள்ளார்கள். மொழி நூலறிஞர் முனைவர் கால்டுவெல், திராவிடமொழிகளையும் வடமொழியையும் நன்கு ஆராய்ந்து, வடமொழியினும்…