திருக்குறள் கல்வெட்டுகள் கருத்தரங்கமும் நூல் வெளியீடும்

 திருக்குறள் ஏன் கல்வெட்டுகளாக்கப்பட வேண்டும் என்பது பற்றிய கருத்தரங்கமும் நூல் வெளியீட்டு விழாவும் தை 24, 2047 / 7.2.2016 அன்று உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்(தரமணி), சென்னையில் சிறப்பாக நடந்தேறியது.  இதில் இங்கிலாந்து இலண்டனைச் சேர்ந்த கோல்டுசுமித்து பல்கலைக்கழகப் பேராசிரியரும், இலண்டன் தமிழ்ச்சங்க நிறுவனர்களில் ஒருவருமான திரு.சிவாபிள்ளை, இந்தோனேசியா தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு.விசாகன், குமாரபாளையம் எசு.எசு. எம். கல்விக்குழுமத்தின் தலைவரும் நடிகர் பிரபு அவர்களின் சம்பந்தியுமான திரு.எம்.எசு.மதிவாணன், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் திரு. விசயராகவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.   இக் கருத்தரங்கில்,…

திருக்குறளும் தொடர்பாடலும் – சிவா(பிள்ளை)

திருக்குறளும் தொடர்பாடலும்   தமிழர்கள் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே இந்தப் பூமியில் வாழ்ந்தாகப் பல செய்திகள் சொல்லப்படுகின்றன. அவ்வாறான ஒரு மொழி பேசிய இனம் சமூக மாற்றங்களைச் எதிர்கொள்ள என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று பார்ப்பது தமிழ் மொழியை மட்டுமே நம்பி அதற்காகத் தங்கள் உயிர் உடைமை உறவுகளைத் கூடத்தொலைக்கும் மக்களுக்கு முதன்மையானது. அந்தத் தேடலின் ஒரு பகுதி திருக்குறளில் தொடர்பாடல் பற்றி என்ன சொல்கின்றது என அறிந்துகொள்வதாகும்.   மனித இன முயற்சியின் இன்றைய மிகப்பெரும் வளர்ச்சி எது என்று கேட்டால்…