தொல்காப்பிய விளக்கம் – 9 (எழுத்ததிகாரம்)

தொல்காப்பியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (முந்தைய இதழ்த் தொடர்ச்சி) நன்னூலாசிரியர், நெட்டெழுத்தே வேண்டியளவு நீண்டி ஒலிக்கும் என்றும் அதன் அடையாளமாக நெட்டெழுத்தின் பின்னர் அதன் இனக்குற்றெழுத்துத் தோன்றி நிற்கும் என்றும் கூறியுள்ளார். இக்கருத்து, தொல்காப்பியத்திற்கு மாறுபட்டது.   தொல்காப்பியர் முன்பு, மூன்று மாத்திரையாக ஒலித்தல் ஓரெழுத்துக்குக் கிடையாது என்றும் (நூற்பா 5) மாத்திரையை நீ்ட்டிச் சொல்ல வேண்டிய இடங்களில் மாத்திரைக்கேற்ப எழுத்துகளைச் சேர்த்து ஒலித்தல் வேண்டும் என்றும் (நூற்பா 6) கூறியுள்ளமை நோக்கத்தக்கது.   42.   ஐ, ஔ, என்னும் ஆயீரெழுத்திற்கு…

எங்கும் இன்பம் இனிதே பொலிகவே!

குறள்நெறி     ஓங்கி         குடியர              சுயர்ந்து பசியும்           பிணியும்        பகையும்   நீங்கி வசியும்      வளனும்             சுரந்து            வாழியர் வையகம்      வாழ்க;        வான்தமிழ்     வெல்க உழைப்பே   உயிரென      உலகுக்    குணர்த்தும் பொங்கற்   புதுநாள்        பொலிவுடன்     சிறக்க எங்கும்           இன்பம்      இனிதே      பொலிகவே. –  செம்மொழிச்சுடர் பேராசிரியர்     முனைவர் சி.இலக்குவனார்        (குறள் நெறி பொங்கல் ஆண்டு மலர் 15-01-1965)

இலக்குவனாரின் தொல்காப்பிய ஆய்வு – 7

(முந்தைய இதழ்த் தொடர்ச்சி)   311. அளவைகளும் எடைகளும்  பல்வேறு அளவைகளும், நிறைகளும் பயன்பாட்டில் கண்டயறிப்பட்டுள்ளன.  பயன்பாட்டின் போது பெயர்களின்  ஒலிகள் மாறுவது தொடர்பான விதிகளை அவர் ஒழுங்குபடுத்தியுள்ளார். (எழுத்து: நூற்பாக்கள் 164, 165, 166, 167, 168, 169, 171, 239, 240) 171 ஆம் நூற்பாவிலிருந்து அளவைகள், நிறைகளின் பெயர்கள் க, ச, த, ப, ந, ம, வ, அ, உ ஆகிய தொடக்க எழுத்துகளைக் கொண்டு உள்ளமை அறியலாம். உரையாசிரியர் நச்சினார்க்கினியார் பின்வருமாறு அவற்றின் பெயர்களைக் குறிப்பிடுகின்றார். அளவைகள்:…

வள்ளுவர் வகுத்த அரசியல்

 – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (முந்தைய இதழ்த் தொடர்ச்சி) 3..        பெரும்பொருளால் பெட்டக்கது ஆகி  அருங்கேட்டால்  ஆற்ற விளைவது நாடு. (குறள் 732)  பெரும் பொருளால் – மிகுந்த பொருள்களால்; பெட்டக்கது ஆகி – யாவராலும் விரும்பத்தக்கது ஆகி; அருங்கேட்டால் – கேடுகளின்மையால்; ஆற்றவிளைவதே – மிகுதியாக விளைவதே; நாடு-நாடு ஆகும்.  நாட்டில் மிகுந்த பொருள்கள் இருந்தால்தான் குறைவற்ற வாழ்க்கை நடத்த முடியும். இல்லையேல் முட்டுப்பட்ட வாழ்க்கை நடத்துவதனால் துன்புற்றுப் பொருள் நிறைந்துள்ள வெளிநாடுகட்குச் செல்லத் தலைப்படுவர். நமது நாடு மிகுந்த பொருள்கள்…

தொல்காப்பிய விளக்கம்

– பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் முன்னுரை நம் இனிய செந்தமிழ் மொழியில் உள்ள தொன்மையான நூல்களில் மிகவும் தொன்மை வாய்ந்த ஒன்றாகத்  தொல்காப்பியம் கருதப்படுகின்றது. தொல்காப்பியத்தின் காலம் கி.மு.ஆறாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாகும். வடமொழிப் பாணினியின் காலமாம் கி.மு.நான்காம் நூற்றாண்டுக்கும், தென்மொழித் திருவள்ளுவரின் காலமாம் கி.மு.முதல் நூற்றாண்டுக்கும் முற்பட்ட காலத்ததாகும் தொல்காப்பியம்

வள்ளுவர் வகுத்த அரசியல்

 – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் 1. நாட்டு இயல்  அ. நாடு*  நாடு-விரும்பு: மக்கள் விரும்பி வாழுமிடம் நாடு எனப்பட்டதுபோலும். அந்த நாட்டில் வாழ்வோர் தமக்கு வேண்டியவற்றைத் தேடி வருந்தாமல், பிற நாடுகளை எதிர்பார்த்து  ஏங்கியிராமல் மக்களுக்கு வேண்டியன யாவும் பெற்றிருத்தல் வேண்டும். அங்ஙனமின்றிப்பிற நாடுகளை எதிர்பார்த்து வாழும் வகையில் செல்வக் குறைபாடு உடைய நாடு, நாடு ஆகாது