காவித் துணிவேண்டா – பாரதியார்
காவித் துணிவேண்டா, கற்றைச் சடைவேண்டா பாவித்தல் போதும் பரமநிலை யெய்துதற்கே ! சாத்திரங்கள் வேண்டா சதுமறைக ளேதுமில்லை; தோத்திரங்க ளில்லையுளந் தொட்டுநின்றாற் போதுமடா! சி.சுப்பிரமணிய பாரதியார்
பெண்கள் விடுதலைக்காகப் பாரதியார் கூறுவன
பெண்கள் விடுதலைக்காக முதன்மையான தொடக்கப்படிகளாகப் புரட்சிக் கவிஞர் பாரதியார் கூறுவன – (1) பெண்களை பருவமடையும் முன்பு திருமணம் செய்துகொடுக்கக் கூடாது. (2) அவர்களுக்கு விருப்பமில்லாதவர்களைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தல் கூடாது. (3) திருமணம் செய்துகொண்ட பிறகு அவள் கணவனைவிட்டு நீங்க இடங்கொடுக்க வேண்டும். அதன் பொருட்டுஅவளை அவமானப்படுத்தக் கூடாது. (4) முன்னோர் சொத்தில் பெண்குழந்தைகளுக்குச் சம பாகம் செய்து கொள்வதைத் தடுக்கக்கூடாது. (5) திருமணமே இல்லாமல் தனியாக இருந்து வணிகம், கைத்தொழில் முதலியவற்றால் மதிப்புடன் வாழ விரும்பும் பெண்களை விரும்பியதொழில் செய்து …