உச்சமான தலைவர் சி.பா.ஆதித்தனார்- ‘பெருங்கவிக்கோ’ வா.மு.சேதுராமன்
‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் 111- ஆவது பிறந்தநாளும் இலக்கிய பரிசளிப்பு விழாவும் நடைபெற்ற பொழுது மூத்த தமிழ் அறிஞர் விருதும் விருதுத் தொகை உரு..3இலட்சமும் பெற்ற ‘பெருங்கவிக்கோ’ வா.மு.சேதுராமன் ஏற்புரை வழங்கினார்:-அப்பொழுது அவர் பின்வருமாறு உரையாற்றினார் குடும்ப உறவு ஐயா சி.பா.ஆதித்தனாரின் உள்ளக்கிடக்கை, வாழ்க்கை ஒவ்வொரு தமிழனும் அறிந்துகொள்ளக்கூடிய, நடைமுறைப்படுத்தக்கூடிய ஒப்பற்ற வாழ்வு நெறியாகும். அவரின் உன்னதமான உழைப்பே அவரை உயரச்செய்தது. தொழிலாளருடன், தொழிலாளராக வாழ்ந்து பத்திரிகையை உயர்த்திக்காட்டினார். நான் பார்த்த வரையில், ‘தினத்தந்தி’ குடும்ப உறவுபோல் எந்தப் பத்திரிகையிலும்…
தினத்தந்தி தமிழர்களின் சொத்து – தங்கர் பச்சான்
சி.பா.ஆதித்தனார் 111-வது பிறந்தநாள் மற்றும் இலக்கிய பரிசளிப்பு விழா நேற்று மாலை ராணி சீதை மன்றத்தில் நடந்தது. சி.பா.ஆதித்தனார் இலக்கிய பரிசு உரூ.2 இலட்சம் ‘தங்கர்பச்சான் கதைகள்’ என்ற நூலுக்காகப் பெற்ற தங்கர்பச்சான் ஏற்புரையாற்றினார். அப்பொழுது பின்வருமாறு தெரிவித்தார்: இலக்கியப் பரிசுகளும், விருதுகளும் இலக்கியத் தரத்தை உயர்த்துவதற்காகத் தரப்படுகின்றன என்பதைவிட இலக்கியவாதிகளை உயிர்ப்புடன் வைத்துக் கொள்வதற்காகவே தரப்படுவதாக உணர்கிறேன். திரைப்படத் துறையைத் தொழிலாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டாலும் என் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வது இலக்கியத்தின் வழியாகத்தான். திரைப்படப் படைப்பாற்றலுக்காக எனக்கு…