காலுடுவெல்லும் உலகளாவிய தமிழாய்வும்4/4 – முனைவர் சான் சாமுவேல்
(காலுடுவெல்லும் உலகளாவிய தமிழாய்வும் ¾ – முனைவர் சான் சாமுவேல் – தொடர்ச்சி) காலுடுவெல்லும் உலகளாவிய தமிழாய்வும் 4/4 மத்தியதரைக்கடற் பகுதியில் பேசப்பட்டுவந்த எலாமைட்டு மொழி தமிழோடு நெருங்கிய தொடர்புடையது என்பதைக் காலுடுவெல் சுட்டியுள்ளார். மறைந்துபோன எலாமைட்டு மொழி பேசிய மக்களை எலாமியர் என்று கிறித்தவத் திருமறை குறிப்படும். எலாமிய–தமிழ் ஆய்வு, உலகின் பல்வேறு அறிஞர்களையும் கவர்ந்துள்ளது. அரப்பா நாகரீக மக்கள் திராவிட–எலாமோ என்ற ஒரு கலவை மொழியினைப் பேசியதாக சான் மாஃக்பர்சன் என்னும் அறிஞர் ஆய்ந்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. காலுடுவெல்லின் 19–ஆம் நூற்றாண்டைய…
காலுடுவெல்லும் உலகளாவிய தமிழாய்வும் ¾ – முனைவர் சான் சாமுவேல்
(காலுடுவெல்லும் உலகளாவிய தமிழாய்வும் 2/4 –தொடர்ச்சி) காலுடுவெல்லும் உலகளாவிய தமிழாய்வும் ¾ மேற்கூறிய பிற உலகமொழிகளோடு தமிழை ஒப்பிட்டு ஒப்புமைக் கூறுகளைக் காலுடுவெல் வெளிப்படுத்தியதன் விளைவாகத் தமிழ்மொழி குறித்து 19-ஆம் நூற்றாண்டு வரை நிலவிய குறுகலான எண்ணங்கள் தூள்தூளாகச் சிதைந்தன. தமிழக மண்ணின் அடிவரை ஆணிவேரை மிக ஆழமாகச் செலுத்தி உலகெங்கிலும் விழுதுகளைப் பரப்பி, விழுதுகள் தாங்கிப் பிடிக்கும் நிலையில் உலகெங்கும் கிளை பரப்பிய மிகப் பிரமாண்ட ஆலமரமாக காலுடுவெல்லின் ஆய்வால் தமிழ்மொழி காட்சிதரத் தொடங்கியது. சமற்கிருதத்தின் திரிந்த வடிவமாக 18-ஆம் நூற்றாண்டுவரை…
காலுடுவெல்லும் உலகளாவிய தமிழாய்வும் ¼ – முனைவர் சான் சாமுவேல்
காலுடுவெல்லும் உலகளாவிய தமிழாய்வும் ¼ ஐரோப்பிய நாட்டு அருட்தொண்டர்களுள் காலுடுவெல்லின்(Caldwell) அளவிற்குத் தமிழாய்வில் மிகப்பெரும் பங்களிப்பு நல்கியோராக எவரையும் குறிப்பிட முடியவில்லை. தமிழரின் விழுமிய அறக்கோட்பாடுகள் ஐரோப்பிய நாட்டு அறிஞர் உலகில் பரவ அடியெடுத்துக் கொடுத்தார் வீரமாமுனிவர் எனப்பெயரிய பெசுக்கி எனும் இத்தாலிய நாட்டு இறைத்தொண்டர். அச்சுப்பொறியினைத் தரங்கை மண்ணில் நிறுவி நவீன இந்தியாவின் உருவாக்கத்திற்கு அடித்தளம் அமைத்து அச்சுக்கலையினைத் தமிழர் கையில் வழங்கினர் சீர்திருத்தச் சபையினைத் தமிழ் மண்ணில் நிறுவிய செருமன் நாட்டு இறையடியார் சீகன்பால்கு(Bartholomäus Ziegenbalg) அவர்கள். தமது முன்னோடிகளான இவர்களது…
தமிழுக்கு வளம் சேர்த்த அயல்நாட்டுத் தமிழறிஞர்கள். இ. சீகன்பால்கு, ஈ. இரேனியசு, உ. காலுடுவெல் – பா.வளன் அரசு
(தமிழுக்கு வளம் சேர்த்த அயல்நாட்டுத் தமிழறிஞர்கள். அ. ஆந்திரிக்கசு அடிகளார், ஆ. வீரமாமுனிவர்-தொடர்ச்சி) தமிழுக்கு வளம் சேர்த்த அயல்நாட்டுத் தமிழறிஞர்கள் 3. செருமானியத் தமிழ்ச் சான்றோன் சீகன்பால்கு (1682-1719) கடற்கரை மணலில் கைவிரலால் எழுதிப் பழகி, அழகப்பன் உதவியுடன் எட்டே மாதங்களில் தமிழ் கற்ற சீகன்பால்கு(Bartholomäus Ziegenbalg), அலைபாடிக் கலை வளர்க்கும் தரங்கம்பாடியில் பதின்மூன்று ஆண்டுகள் மாண்புமிகு தமிழ்ப் பணி புரிந்துள்ளார். நேர்மையாளருக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும் என்று கிறித்தவம் என்னும் நூல் வழியாக நவின்ற சீகன்பால்கு, தாய்மொழி வாயிலாகப் பிறமொழியைக் கற்று புலமைபெற…
சீகன்பால்குவின் தமிழ்ப்பணி – கருத்தரங்கம்
ஐப்பசி 11, 2045 / அக்.28, 2014 சென்னை