சி.செயபாரதனின் ‘சீதாயணம்’ – நாடகம் :காட்சி 3
(சித்திரை 06, 2046 / ஏப்பிரல் 19, 2015 தொடர்ச்சி) காட்சி மூன்று துறவகத்தில் இலவா, குசா இரட்டையர் பிறப்பு இடம்: வால்மீகி முனிவரின் துறவகம். நேரம்: மாலை அரங்க அமைப்பு: வால்மீகி இராமகதையை எழுத்தாணியால் ஓலைச் சுவடியில் எழுதிக் கொண்டிருக்கிறார். அப்போது பெண்சீடர்கள் சீதையை மெதுவாகத் தாங்கிக் கொண்டு உள்ளே நுழைகிறார்கள். வால்மீகி எழுதுவதை நிறுத்தி எழுந்து சென்று வரவேற்கப் போகிறார். பெண்சீடர்கள்: மகரிசி! காட்டில் மயக்கமுற்ற இந்தப் பெண்ணை நாங்கள் அழைத்து வந்தோம். இந்தப் பெண்மணி ஒரு கர்ப்பிணி மாது….