எங்கே போகிறோம்? – தவத்திரு குன்றக்குடி அடிகளார் 1. அணிந்துரையும் பதிப்புரையும்
எங்கே போகிறோம்? 1.அணிந்துரையும் பதிப்புரையும் அணிந்துரை – முனைவர். த. பெரியாண்டவன் நிறைமொழி மாந்தராக விளங்கும் தவத்திரு குன்றக் குடி அடிகளார் சைவத்தையும், தமிழையும் இரண்டு கண்களாகக் கொண்டொழுகும் செந்தண்மையாளர், சமயமும், தமிழும் சமுதாயத்தை வளர்ப்பதுடன் தமிழும் வளர வேண்டும் என்னும் கொள்கையர். மொழி வளர்ச்சி என்பதையே பண்பாட்டின் வளர்ச்சி என்பதை பறைசாற்றி வரும் பண்பாளர். ஒழுக்கத்தில் குன்றின் மேல் இட்ட விளக்காக இலங்கி வரும் அடிகளார் அவர்கள் மதுரை வானொலி நிலையத்தில் தொண்ணுற்று நான்காம் ஆண்டு பல்வேறுநாட்களில் விடுதலைநாள் விழாச் சிந்தனைகள், கல்விச் சிந்தனைகள்,…