திருவள்ளுவர் சீர்திருத்தப் பெரியார் – சி.இலக்குவனார்
திருவள்ளுவர் சீர்திருத்தப் பெரியார் “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்றார் பாரதியார். வள்ளுவர் தோன்றியதால் நம் தமிழ்நாட்டின் பெருமை உயர்ந்தது. உலகப் பெரும்புலவராம் திருவள்ளுவர் தோன்றிய நாடு என உலகோர் நம் தமிழ்நாட்டைப் போற்றுகின்றனர். வள்ளுவர் சங்கக் காலத்தில் வாழ்ந்த புலவர்களுள் தலைசிறந்தவர். இவர் ஏனைய புலவர்கள் சென்ற வழியில் செல்வதோடு மட்டும் நின்றுவிடவில்லை. அவர்களின்று மாறுபட்டும் சென்றுள்ளார். ஏனைய புலவர்கள் உலக வாழ்க்கையை உள்ளதை உள்ளவாறு சொல்லோவியப்படுத்தினர். வள்ளுவர் அவ்வாழ்க்கையைத் திருத்தியமைக்க முயன்றுள்ளார். மற்றைப் புலவர்கள் கள்ளுண்டலையும்,…