பகழிக்கூத்தர் கோவில் கல்வெட்டு – நா. கணேசன்
பகழிக்கூத்தர் கோவில் கல்வெட்டு பகழிக்கூத்தர் அருணகிரிநாதர் காலத்தில் வாழ்ந்தவர். கவி காளமேகம்போலச் சைவம் பாடிய வைணவர். திருச்செந்தூர் முருகன் சோதிக்க திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் என அழகான பனுவல் பாடிய பெரும்புலவர். சீவகசிந்தாமணிச் சுருக்கம் என்னும் நூலும் பாடியவர். அதனைச் சருக்கரை இராமசாமிப் புலவர் மதுரைத் தமிழ்ச் சங்கத்திற்கு அளித்தார். (குறைப்படி). அதில் உள்ள தற்சிறப்புப் பாயிரத்தால் பகழிக்கூத்தர் பெயர்க்காரணமும், அவரது ஊரும் விளங்குகிறது. திண்டிம கவி என்று அருணகிரிநாதர் அழைக்கப்பட்டதும் பகழிக்கூத்தர் பாடலால் தெரிகிறது. இவற்றை மு. இராகவையங்கார் பல…